உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் போட்டியிடும் திறனை இந்திய நிறுவனங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் நூற்றாண்டு மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி, புதுடெல்லி பாரத் மண்டபத்தில் இன்று காலையில் தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்தியப் பொருளாதாரம் கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் இளைஞர்கள், விவசாயிகள் உழைப்பால் நிலைமை மாறியுள்ளது என்றும், 13 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பே சாட்சி என்றும், நம் வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்ல தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும், தன்னிறைவு பெற்ற நாடாக மாற, நாட்டிற்கே முன்னுரிமை என்பதை தொழில் துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
மேலும், சுயசார்பு இந்தியா எனும் தொலைநோக்கு பார்வையை நமக்கு வழங்கியது காந்திதான் எனவும், தனக்கு தேவையான பொருட்களை தானே தயாரிக்கும் சிந்தனையை காந்தி நமக்கு வழங்கினார் எனவும், 1930-ல் காந்தி விட்டுச் சென்ற அதே செய்தியை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நான் உங்களிடம் கூறுகிறேன் என்றும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் தொழில்துறையினருக்கும், தொழில்முனைவோருக்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

