முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் பிடித்தமான இடமாக மாறிவிட்டதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நாகப்பட்டினத்தில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் தவெக நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே டி.ஆர்.ஐ. அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? என்று வினவியுள்ளார். பிடிக்க முடியவில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? என்றும் வினவியுள்ளார். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் பிடித்தமான இடமாக மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூடத் திறப்பதாகவும், ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.



