
அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் 9 அமைச்சர்கள் இருந்தும் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கப்படவில்லை. கல்லூரி கட்டுவதற்கான தடையைத் தி.மு.க. அரசு நீக்கியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்தைக் காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:’’கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால், வீட்டிற்கொரு பட்டதாரி உள்ளனர். தமிழக மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும்.’’
அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் 9 அமைச்சர்கள் இருந்தும் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கப்படவில்லை. கல்லூரி கட்டுவதற்கான தடையைத் தி.மு.க. அரசு நீக்கியது. தி.மு.க. ஆட்சியில் தான் இந்தப் பகுதியில் 2 மகளிர் கல்லூரிகள் வந்துள்ளன.உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நேரில் வர இயலவில்லை.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


