உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர விருப்பம் – டிரம்ப், ஜி ஜின்பிங்..!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தானும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சென்சென் நகரில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாடுகளிடையே பல துறைகளிலும் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
புடினுடனான சந்திப்பையடுத்துச் சீன அதிபர் சி ஜின்பிங்கையும் டிரம்ப் சந்தித்துப் பேச உள்ளார்.

இதேபோல சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர்.இந்த முத்தரப்புச் சந்திப்புக் குறித்து முன்கூட்டிச் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தானும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *