நீண்ட நாட்களுக்கு நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும்: கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Advertisements

டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 81-வது நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்; “ மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அவரது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாட்களுக்கு நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வாழ்த்து குறிப்பில்“ காங்கிரஸ் தலைவர் திரு கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான அவரது உறுதியான நம்பிக்கை, அவரது தலைமை, விடாமுயற்சி மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை நம்மை தினமும் ஊக்குவிக்கின்றன. அவரது விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவரது பொது வாழ்வின் அடையாளம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *