ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் ఃஆல்அவுட்ః ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:- இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Posts
சர்வதேச பேட்மிண்டன் போட்டி! பிவி சிந்துதோல்வி ! தொடரில் இருந்து வெளியேறினார்!
- Web Team
- July 19, 2023
- 0
யோசு, கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. […]
Sep 2023 Monthly Rasi Palan: சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
- Web Team
- September 2, 2023
- 0
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே: ஜென்ம ராசியில் புதன், 9- குரு- […]
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கவுன்சலிங் தொடங்கியது!!
- Web Team
- July 25, 2023
- 0
சென்னை : தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முதல்கட்ட கவுன்சலிங் […]
