திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் அரசியலில் திருப்பம்..!

Advertisements
முன்னாள் முதலமைச்சராகவும் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்த ஓ பன்னீர்செல்வம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் திமுகவில் இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறார். சபாநாயகர் அப்பாவு அறையில் அவர் அமைச்சர் சேகர்பாபு உடன் அரை மணி நேரம் பேசியிருக்கிறார் .
எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதலால் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி ஓ பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வந்தார் . தற்போது அவரைச் சுற்றியுள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கட்சி மாறிவிட்டனர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்து விட்டார் . அதேபோல் வைத்தியலிங்கம் வெல்லமண்டி நடராஜன் தர்மர் எம்பி ஜே சி டி பிரபாகரன் ஆகியோரும் கட்சி மாறி விட்டனர் .
இது மட்டுமில்லாமல் ஓபிஎஸ் அணியில் இருந்த எஸ் எஸ் கதிரவன் வி பிரபு சுப்புரத்தினம் ஆகியோரும் திமுகவில் இணைந்து விட்டனர். ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆலோசனை வழங்கி வரும் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூட தனியாக கழன்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் சூழ்நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து பேசினார் சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசினர் .
அப்பொழுது தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா இடம் தரப்பட வேண்டும்.  தேர்தலில் போட்டியிடுவதற்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் பேசியதாக தெரிகிறது . இது தொடர்பாக சேகர் பாபு திமுக தலைமை இடத்தில் பேசி முடிவு சொல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் .
இதன் அடிப்படையில்,  தற்போது திமுக தரப்பில் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டு தொகுதிகளும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா பதவியும் தருவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன . இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் எந்த நேரமும் திமுகவில் இணையலாம் இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது .
திமுகவைப் பொறுத்த வரையில் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதால் தென் மாவட்டங்களிலும் சில வட மாவட்டங்களிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகும் என்றும் இன்னொரு பக்கம் அதிமுகவிற்கு இது இழப்பாக இருக்கும் என்றும் கணக்கு போடப்பட்டிருக்கிறது .
இதனிடையே ஓ பன்னீர்செல்வம் எப்படியும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவார் என அண்ணாமலை ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார் .
இருந்த போதிலும் , ஓ பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ இணைத்து கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய தடையாக இருக்கிறார். என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் ,
எனவே வெகு விரைவிலேயே ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்பது உறுதியான தகவலாக தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *