Elderly Woman Rape: மூதாட்டியை கதற கதற கற்பழித்த போதை ஆசாமி!

கன்னியாகுமரியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழிப்பு செய்த போதை இளைஞனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 75 வயதுடைய அக்காளும், 68 வயது தங்கையும் என 2 மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் தங்கையான 68 வயது மூதாட்டிக்கு திருமணம் ஆகவில்லையெனக் கூறப்படுகிறது. அக்காள் வீட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். இதேபோல் நேற்றும் அவர் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். இதனால் 68 வயது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் நாகர்கோவில் தட்டான்விளையை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜ்குமார் (வயது33) அந்த வழியாக வந்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்தார். மேலும்  போதையில் இருந்த அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்துப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்க முடியாத மூதாட்டி அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது வேலை முடித்து வீட்டுக்கு வந்த அக்காளிடம் நடந்த சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். உடனே தனது தங்கைக்கு நடந்த கொடூரத்தை குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வடிவீஸ்வரம் பகுதியில் மது போதையில் சுற்றித்திரிந்த ராஜ்குமாரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். அதேவேளை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர்மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பட்டப்பகலில் வீடுபுகுந்து மூதாட்டியை வாலிபர் குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *