TamilNadu: 6 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுகிறது. வானிலை மையம் தெரிவித்ததுபோல், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *