Actress Janhvi Kapoor : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அனந்த் அம்பானியின் திருமணத்தில் தங்க நிற ஆடையில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக விளங்கி, பிறகு பாலிவுட் உலகிற்கு சென்று, அங்கும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த நடிகை தான் ஸ்ரீதேவி. அவருடைய மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
அம்மாவைப் போலப் படங்கள்மீது கொண்ட ஆசையின் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு முதல், இவர் பாலிவுட் உலகில் பயணித்து வருகிறார். தொடர்ச்சியாக நல்ல பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர், முதல் முறையாக ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகிலும் களமிறங்கியுள்ளார்.
அதேபோல விரைவில் நடிகை ஜான்வி கபூர், தமிழ் திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. குறிப்பாக நடிகர் சூர்யாவோடு ஒரு திரைப்படத்தில் அவர் இணையுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடியின் திருமணம் நடைபெற்ற நிலையில், அதில் தங்க நிற லெஹன்கா அணிந்து அசத்தியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
