Tamilnadu : குடிநீர் வழங்கல் துறையில் 890 கோடி ரூபாய் ஊழல்..!

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2538 பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டதில் 890 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள், இளநிலைப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 2538 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யக் கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.

இந்த ஆண்டு ஆகஸ்டு ஆறாம் நாளில் இதற்கான பணியாணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 25 இலட்சம் முதல் 35 இலட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு இந்தப் பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

டிவிஎச் கட்டுமான நிறுவனத்திலும், அமைச்சர் கே.என்.நேருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *