இன்று வெளியாகிறது ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி”.

இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ டிரெய்லரின் பி.டி.எஸ். வீடியோவைப் படக்குழு நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழைத் தணிக்கைக்குழு வழங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டுப் படக்குழு நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இன்று காலை 11.08 மணிக்கு ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்பேட் ஒன்று வெளியாக உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. அதில் உற்சாகமாகத் தயாராக இருங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *