Lok Sabha Election 2024: மதுரையில் தாமரை சின்னம் போட்டியிடும்!

Advertisements

மதுரை பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னம் தான் போட்டியிடும், அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென மதுரை பாஜக மாவட்ட தலைவர் இராஜசிம்மன்திட்டவட்டமாகதெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகா லட்சுமி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மதுரை பாராளுமன்ற தேர்தல் குழுப் பொறுப்பாளர் நடராஜன். மாவட்ட தலைவர் ராஜாசிம்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும், அதற்காக நாம் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று தீவிர தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகா லட்சுமி பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் இராஜசிம்மன்…வரும் 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக மாறிட மக்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு பிரச்சார வாகனம்மூலம் மக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளோம்.

மேலும், மேலூர் மற்றும் ஒத்தக்கடை பகுதியில் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இரண்டு கருத்துக் கேட்புக் பெட்டி வைக்கப்பட உள்ளது, அதில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

வரும் தேர்தலில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தாமரை சின்னம் தான் கண்டிப்பாகப் போட்டியிடும்,  இதுதொடர்பாகக் கூட்டணி கட்சிகளுடனும் வலியுறுத்தப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *