Peravurani Rekla Race: பிரமிக்கவைத்த குதிரை, மாட்டு வண்டி பந்தயம்!

Advertisements

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்  நடைபெற்றது.சுமார் 8 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் சார்பில், 22 ஆம் ஆண்டு பொங்கல் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி – குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என 6  பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றிற்கு மொத்த பரிசாக சுமார், ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, சுழற்கேடயம் பரிசு வழங்கப்பட்டது.

போட்டி தொடங்கியதும் எல்கையை நோக்கி குதிரை வண்டிகள் – மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. 4 பிரிவுகளிலும் 67 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 2 பிரிவுகளில் 20 க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் பங்கு பெற்றன.

மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்களை, சுமார் 8 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்து  பொதுமக்கள், பந்தயக் கலா ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *