SP Adithanar:சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் – தினத்தந்தி குழுமம் மரியாதை!

Advertisements

“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோர்க்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *