
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, தமிழக மக்களின் வெற்றித் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதில், பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.




