IPL 2026 – முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி..!

Advertisements

19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரடர்ஸ் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் 81 ரன்னும், ரோகித் சர்மா 78 ரன்னும் அடித்தனர். இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 13 வருடங்களாக நீடித்து வந்த தொடக்கப் போட்டி சாபம் தற்போது முடிவுக்கு வந்தது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *