Sirkali: இறந்தவரின் உடலை வைத்துப் பொதுமக்கள் சாலை மறியல்!

Advertisements

சீர்காழியில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையைச் சீரமைக்காததால் இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை வசதி செய்துதர கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பகுதிகளில் சாலைக்காக மக்கள் போராடும் சூழல் சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை நகரில் அரசு மதுபான கடை மட்டும் அமைந்துள்ள பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி ஒரு புறம்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 5 -வது வார்டு செம்மங்குடி சாலையில் அப்பகுதி வசிக்கும் மக்களுக்கான சுடுகாடு அமைந்துள்ளது.

இந்தச் சுடுகாட்டில் நகராட்சி 5 வார்டுக்கு உட்பட்ட கோவிலான் தெரு, அம்பேத்கர்நகர், திருவந்தி கட்டளை தெரு, மணல்திடல் தெரு, சரக்கான் தெரு பன்னீர்செல்வம் தெரு உள்ளிட்ட 11 பகுதிகளில் யாரேனும் இறந்தால் அவர்களை இந்தச் சுடுகாட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் சிமெண்ட் சாலை சிதலமடைந்து காணப்பட்டதால் சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.  இந்தச் சூழலில் டெண்டர் விடப்பட்டு 6 மாத காலத்திற்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கப்படாத நிலையில்  கோவிலான் தெருவில் வசிக்கும் சாமிதுரை என்பவரது மனைவி 85 வயதான ஜானகியம்மாள் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஜானகி அம்மாள் உடலை அடக்கம் செய்ய வாகனத்தில் எடுத்து வந்துள்ளனர். வந்தபோது சுடுகாடு அருகே சாலையில் இறந்தவரின் உடலைக் கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி வைத்துச் சாலையைச் சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  திருமுல்லைவாசல் சீர்காழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறை சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் புதிய சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, இறந்தவரின் உடலை வானத்திலிருந்து வயல் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் சுமார் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *