
இந்தியா ஒரே பண்பாட்டுக்கும், ஒரே கொள்கைக்கும் உரித்தானதில்லை என்றும் இது அனைத்து மக்களுக்குமானது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நோக்கங்களைச் சுருக்க நினைக்கும் ஒவ்வொரு சக்தியையும் தடுப்பது என்கிற உறுதிப்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம் அரசியலமைப்பையும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் காக்கும் வகையில் உண்மையான கூட்டாட்சிக்குத் தேவையானவற்றை நாம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்வதன்மூலம் நம் குடியரசைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

