
விஜய் டிவி சீரியல்களில் ஹீரோயினாக நடித்துப் பிரபலமான நடிகை ஒருவர் தான் திருமணமே செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பேன் எனக் கூறி இருக்கிறார்.
சினிமாவை போல் சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அந்தவகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. இவர் ஆபிஸ் தொடர்மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த பவித்ரா கடந்த 2018-ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த வகையில் நடிகை பவித்ரா ஜனனி முதன்முதலில் ஹீரோயினாக நடிக்கக் கமிட்டான சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்தச் சீரியல் சுமார் 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தச் சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் மற்றுமொரு சீரியல் தொடங்கப்பட்டது. தென்றல் வந்து என்னைத் தொடும் எனப் பெயர்கொண்ட அந்தச் சீரியலில் அபிநயாவாக நடித்து அசத்தி இருந்தார் பவித்ரா.
சின்னத்திரையில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வரும் பவித்ரா ஜனனிக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 9 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். தற்போது நடிகை பவித்ராவுக்கு 32 வயதாகிறது. திருமண வயதை எட்டிய பவித்ராவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கிய நிலையில், தான் திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவில் இல்லை என்கிற தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கொடித்திருக்கிறார் ஜனனி.
இதுகுறித்து மனம்விட்டு பேசிய அவர், எல்லத்துக்கும் தீர்வுத் திருமணம் தான் என்று யாருமே சொல்லிவிடக் கூடாது. திருமணம் செய்துகொள்ளாமலேயே உலகத்தில் யாரும் நிம்மிதியாக வாழவில்லையா எனப் பவித்ரா கூறி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்க முடிவெடுத்துள்ள நடிகை பவித்ரா ஜனனி அதை ஓப்பனாகச் சொல்லியதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆபிப் போய் உள்ளனர்.


