
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வரும் நடிகை பார்வதி நாயரின் மெர்சலான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
மலையாளத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த பாப்பின்ஸ் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி நாயர். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் கடந்த 2015-ம் ஆண்டு தான் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
தமிழில் பார்வதி நாயர் நடித்த முதல் படமே அஜித்துடன் தான். அஜித் – கெளதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பார்வதி.
பார்வதி நாயரின் குடும்பம் முழுவதும் துபாயில் செட்டிலாகிவிட்டனர். இவரது சகோதரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் செலக்டராகப் பணியாற்றி உள்ளார். பார்வதியின் தந்தையும் துபாயில் பெரிய தொழிலதிபராம். பார்வதியின் தாய் கல்லூரி பேராசிரியை.
நடிகை பார்வதி பள்ளிப்படிப்பை அபு தாபியில் முடித்துள்ளார். பின்னர் இந்தியா வந்த அவர் கல்லூரி படிப்பைக் கர்நாடகாவில் உள்ள மனிபால் இன்ஸ்டிட்யூட்டில் முடித்திருக்கிறார். அங்குக் கம்பியூட்டர் சையின்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளார் பார்வதி.
படித்து முடித்த கையோடு மாடலிங் துறையில் கலக்கிய பார்வதி நாயர், மிஸ் கர்நாடகா அழகிப் போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலும் வென்றார். இதையடுத்து மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் பார்வதி நியமிக்கப்பட்டார்.
தமிழில் என்னை அறிந்தால் படம் பார்வதிக்கு திருப்புமுனையாக அமைந்ததை அடுத்து, கமல்ஹாசன் உடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார் பார்வதி. தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் இவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இந்தியில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவான 83 என்கிற திரைப்படத்தில் கவாஸ்கர் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பார்வதி நாயர்.
நடிகை பார்வதி நாயர் ஹீரோயினாக நடித்த ரூபம் மற்றும் ஆலம்பனா ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதுதவிர அவர் கைவசம் மற்றுமொரு பிரம்மாண்ட படம் உள்ளது. அது தான் தளபதி விஜய்யின் கோட். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருந்து வந்த பார்வதி நாயர், அதில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிடுவார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் ஆள் அட்ரஸே தெரியாமல் கப் சிப் என இருந்து வந்தார். இதனால் ரசிகர்களும் அவரிடம் உங்களுக்கு என்னாச்சு எனக் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு விடை தரும் வகையில் தற்போது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். லோ ஹிப் சேலை கட்டி செம்ம செக்ஸியாகப் போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள அவர், நாம் உயிரோடு தான் இருக்கிறேன். உங்கள் அன்பான மெசேஜுக்கு நன்றியெனப் பதிவிட்டு இருக்கிறார்.



