Parvathamalai: பூர்வ ஜென்ம புண்ணியம் தரும் பருவத மலை!

Advertisements

பூர்வ ஜென்ம புண்ணியம் தரும் பருவத மலை!

பருவத மலையின் சிறப்பம்சம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்தப் பருவதமலையில் தான், ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாகக் காலடி வைத்த மலை என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சிவரை இரவில் இறைவனுடைய ஒளிவழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்குசித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.


வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரியபாக்கியம் ஆகும். இந்தப் பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியில் உள்ள அனைத்துசிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

சிறப்புகள்:

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்தபலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போதுவிழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ளசெங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்டஅதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசித் தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவனின்கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன்அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்துபின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக்காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள்இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்குச் சிறப்பாகநடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில்உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.


அதுபோல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சிஓடை மலை, புற்று மலை, கோவிலில்  உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவசக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்தமலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு.   26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையைப் பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால்கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்றுஇங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சிவரை இரவில் இறைவனுடைய ஒளிவழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்தில் உள்ள சிவனின் கருவறையிலிருந்துகோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும்காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்குவிளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒருமுறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம்தரும். மலையிலுள்ளசாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்பெறலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *