இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று..! அலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு..!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள அணைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

 

அதற்கு முன்பாக கிறஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் தொடங்கியது. அதன்பிறகு தினமும் சர்ச்சுகளில் பிரார்த்தனை, ஆராதனை நடந்து வந்தது. இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது. அதன்படி நேற்று புனித வியாழன் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை புனித வெள்ளி என்பது துக்க தினமாகும்.

 

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும்.

சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க சர்ச்சுகளில் இன்று மாலையில் சிலுவைப்பாதை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி தினத்தையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *