மாநிலங்களவை உறுப்பினர்களாக நால்வரை நியமித்துள்ளார் – திரௌபதி முர்மு

Advertisements

வழக்கறிஞர் உஜ்வல் நிகம், சதானந்தன் மாஸ்டர், ஹர்சவர்த்தன் சிரிங்லா, மீனாட்சி ஜெயின் ஆகிய நால்வரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 80ஆவது கூற்றின்படி பல்வேறு துறைகளில் திறமையானவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி புகழ்பெற்ற குற்றவழக்குகளில் அரசு சார்பில் வழக்காடிய உஜ்வல் நிகம், கேரளத்தின் புகழ்பெற்ற கல்வியாளரும் சமூகப் பணியாளருமான சதானந்தன் மாஸ்டர், முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா, கல்வியாளரும் வரலாற்றாசிரியருமான மீனாட்சி ஜெயின் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *