அஜித்குமார் கொலை வழக்கை புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் – விஜய் கோரிக்கை

Advertisements

மடப்புரம் பத்திரகாளி  கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாரைக் காவலர்கள் அடித்துக் கொன்றதைக் கண்டித்துச் சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட 24 பேரின் குடும்பத்தினரும் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், 24 குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சாராயம் குடித்துச் செத்தோர் குடும்பத்துக்குப் பத்து இலட்ச ரூபாயும், காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ஐந்து இலட்ச ரூபாயும் இழப்பீடு கொடுப்பது எந்த வகையில் சமூக நீதியாகும் என்றும் விஜய் வினவினார்.
சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு எனக் கூறிய ஸ்டாலின் இப்போது அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது ஏன் என்றும் விஜய் வினவினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *