Parliament Election 2024: நெல்லை, தென்காசி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னை: நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்துவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும், பல்வேறு குழுக்களை அமைத்துத் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளன. திமுக தனது முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் நாளை, தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுவாரென அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *