
அனிமல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மஞ்சள் நிற சேலையில் மகாராணி போல் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம்மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா, அங்கு விஜய் தேவரகொண்டா ஜோடியாகக் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதையடுத்து கோலிவுட் பக்கம் வந்த ராஷ்மிகாவுக்கு கார்த்திக்கு ஜோடியாகச் சுல்தான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும் ராஷ்மிகாவை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அடுத்ததாக ரெயின்போ என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இளைஞர்களின் நேஷனல் கிரஷ் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அங்குக் குட் பாய் படம்மூலம் அறிமுகமான ராஷ்மிகா, அடுத்ததாக மிஷன் மஜ்னு படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது அனிமல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் ராஷ்மிகா.

அனிமல் திரைப்படத்தைச் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. அனிமல் திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இது பான் இந்தியா படமாக வெளிவர உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் ராஷ்மிகா.
அந்த வகையில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற அனிமல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா மஞ்சள் நிற சேலையில் வந்து கலந்துகொண்டார். மஞ்சள் நிற சேலையில் மகாராணி போல் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


