Paralympics: ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம்,ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம்!

பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.

பாரீஸ்:மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீரர் நவ்தீப் சிங் பங்கேற்றார். இப்போட்டியில் ஈரான் வீரர் பெயிட் சட்ஹித் 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி 2ம் இடம் பிடித்தார்.

ஆனால், முதல் இடம் பிடித்த வீரர் பெயிட் சட்ஹித் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல பாரா ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.

அவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதையடுத்து, பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *