Palladam: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலையில் மறியல்!

Advertisements

பல்லடத்தையடுத்த ஆறுமுத்தாம்பாளையம் சின்னக்கரை சாலை சபரி நகரில் சரிவரக் குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த ஆறுமுத்தாம்பாளையம் சின்னக்கரை சாலையில் உள்ள சபரி நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சரிவரக் குடிநீர் விணியொகம் செய்யவில்லையெனக் கூறப்படுகிறது.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆறுமுத்தாம்பாளையம் சின்னக்கரை சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *