Bomb Disposal Squad: ஜெலட்டின் குச்சிகளைச் செயல் இழக்க செய்த வெடிகுண்டு நிபுணர்கள்!

தொண்டியில் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் திரி ஆகியவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்து அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கிராம கடற்கரை மணலில் கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி புதைத்து வைக்கப்பட்ட 88 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 70 மீட்டர் திரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்பாகக் குமரேசன் என்ற உன்னி அடைக்கலம், கண்ணன், செந்தில், ராமநாதன் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் திரி ஆகியவற்றை இன்று தொண்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள தொண்டியம்மன் கோயில் காட்டுப் பகுதியில் மதுரை வெடிகுண்டுப் பிரிவுச் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமை காவலர் வர்கீஸ் ஆகியோர் திருவாடானை காவல் ஆய்வாளர் (தொண்டி பொறுப்பு) ஜெயபாண்டியன், தனிப்பிரிவு காவலர் துரை மற்றும் போலீஸார் முன்னிலையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் திரி ஆகியவற்றை செயல் இழக்க செய்து தீ வைத்து அளித்தனர்.

அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *