Odisha : கல்லூரி மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து போராட்டம்..!

ஒடிசா மாநிலம் பாலசூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து உயிரிழந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் மாநிலந் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூரியில் ரயில் நிலையத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சியினர் கொடிகளை ஏந்தியபடி ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் சிபிஐ எம்எல் கட்சியினர் கொடிகளைக் கையில் ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மயூர்பஞ்சில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் டயரைத் தீவைத்துக் கொளுத்திவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒடிசா மாநிலத்தில் முழு அடைப்பையொட்டி பத்ராக்கில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.  முழு அடைப்பாலும் சாலை மறியலாலும் பத்ராக்கில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *