P. R. Pandian: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Advertisements

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற பிப்ரவரி இறுதிவரை தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன்கோரிக்கைவிடுத்துள்ளார்.  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்: அப்போது மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், , ராணிப்பேட்டை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நடவடிக்கைகளை பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் குமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராகவும், கதிர் வந்த நிலையிலும் பயிர்கள் அழிந்தன. ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் இடுபொருள் இழப்பீடாகவும், கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ10லட்சம் நிவாரணமாகவும் வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு விளை நிலங்களுக்கான நிவாரணத் தொகையை ரூ 17,000 மாகவும்,இறந்தவர்களுக்கு ரூ 6 லட்சமாகவும் குறைத்து நிவாரணம் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும் குடும்ப அட்டைகளுக்கு ரூ 6 ஆயிரம் நீரால் சூழ்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளபடி சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 40% பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை குடியிருப்புகளில் குடியிருந்து பணியாற்றி வருகிறார்கள். பெரும்பகுதியான குடும்பங்கள் தனது சொந்த கிராமத்திலேயே குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு, குடும்ப அட்டை இல்லாதவர்கள் முறையிடலாம் என்று சொல்லுவது ஊழல் முறைகேடுகளுக்கு வலியுறுத்துமே தவிர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்றடையாது. வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசே பயனாளிகளை தேர்வு செய்து நிவாரணம் வழங்கிட முன்வர வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் வேளாண்துறை வேண்டுகோளை ஏற்று நவம்பர் மாதம் துவங்கி சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி பணி துவக்கி இருக்கிறார்கள்.

பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவை உள்ளது.இதனை கருத்தில் கொண்டு தற்போது கருகும் நிலையில் உள்ள சம்பா பயிரை காப்பாற்று நோக்கோடும் கர்நாடகம் நமக்கு தரவேண்டிய நிலுவையில் உள்ள தண்ணீரை கேட்டு பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தெற்கு ராஜன் வாய்க்காளுக்கு இதுவரையிலும் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள் முதல் தண்ணீர் வழங்கவில்லை தற்போது மழையில் சாகுபடி துவங்கி கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கி இருப்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து அப்பகுதி விவசாயிகளுக்கு உடனடியாக கொள்ளிடம் கீழனையிலிருந்து தெற்கு ராஜன் மூலம் தண்ணீரை வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *