
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய் பல்லவிக்கு ‘அமரன்’ இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தேசிய விருதை எதிர்பார்த்து காத்து இருப்பதாகச் சாய் பல்லவி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தேசிய விருது பெற வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது. காரணம் எனக்கு 21 வயது இருக்கும்போது அம்மா ஒரு புடவை எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து கொள்ளும்போது அதைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
அப்போது நான் சினிமாவில் அடியெடுத்து வைக்கவில்லை. எனவே திருமணமாகும்போது அதை உடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து ‘பிரேமம்’ படம்மூலம் நடிகையானேன். எப்போதாவது விருது வாங்குவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நம் நாட்டின் உயரிய விருதான தேசிய விருதைப் பெறுவேன் என்ற நம்பிக்கையும் உள்ளது. என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்கும்போது இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு விருது பெறும் விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். புடவையை அணியும் வரை என்மீது அந்த நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்தார்.
