நொளம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று வீதி வீதியாக ஆய்வு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வீதிகளில் தேங்கி நின்ற கழிவு நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நொளம்பூர் முகப்பேர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் கழிவு நீர் சாக்கடை போல குடியிருப்புகளை விட்டு வடியாமல் உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் அந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நொளம்பூர் பகுதியில் மழை நீரோடு கழிவுநீர் கலந்துள்ளதால் அதனை அதிகாரிகள் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் அந்த பகுதியில் தேங்கியிருந்த கழிவுநீரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடனே அதிகாரிகள் விரைந்து அங்கு வந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்க்க சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வந்த சிறுவன் ஒருவன் தந்தையுடன் சேர்ந்து அங்கிருந்த சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் உடனடியாக மோட்டார் சைக்கிளை அவசரகதியாக நிறுத்திவிட்டு கீழே விழுந்த சிறுவனை முன்னாள் அமைச்சர் உடனடியாக தூக்கி கால்களை உதற செல்லி மீட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.விபத்தில் சிக்கியவர்களை முன்னாள் அமைச்சர் அவசர கதியாக தூக்கி மீட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

