Thiruvadanai Road: சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை!  

Advertisements

திருவாடனை அருகே பாகனவயல் கிராமத்தில் சேதமடைந்து சேரும் சகதியுமாக உள்ள சாலையால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் போட்டோ மட்டும் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தளிமருங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாகனவயல் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது தொடங்கி உள்ள பருவ மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

இதனால் பள்ளி வாகனம் உள்ளே வர மறுப்பதால் 2கிமீ தூரம் வரை மாணவர்கள் நடந்தே சென்று பள்ளி வாகனத்தில் ஏறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும்  ஊராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களின் புகாரைத் தொடர்ந்து சாலையை சீரமைப்பதாக கூறி வெறும் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு சென்றதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *