விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 30 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும் எனக் கூறியுள்ளார். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


