ஆஸ்காரின் ஆஸ்தான நடிகை!

Advertisements

சென்னை:

ஒருநாளைக்கு 10 சாக்லட் தந்துதான் மீனாவிடம் வேலை வாங்க முடியும்… குழந்தை நட்சத்திரம் என்றாலும், அருமையான நடிகை… சொன்னதை கேட்டு நடிப்பாங்க என்று நடிகை மீனா பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்… அந்தப் பேட்டியில், நடிகை மீனா பற்றிப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நடிகை மீனாவை நான் இன்றைக்கும் பேபி மீனா என்றுதான் கூப்பிடுவேன்… நாங்கள் தயாரித்த தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், பன்னீர் நதிகள் என 4 படங்களிலுமே குழந்தை மீனா நடித்திருந்தாங்க… ஆஸ்கார் நிறுவனத்தின், ஆஸ்தான நடிகர்கள் என்றால் அது 2 பேர்தான். ஒருவர் சிவக்குமார், மற்றொருவர் மீனா. சிவக்குமாரும் மேற்கண்ட 4 படங்களிலும் நடித்திருக்கிறார்.

தீர்ப்புகள் திருத்தப்படலாம் படத்தை என் அப்பா எடுத்தபோது எனக்கு 12 வயசு இருக்கும், மீனாவுக்கு 8 வயசிருக்கும்… டயலாக் சரியாகப் பேசவில்லையானால், சரியாக நடிக்கவில்லையானால், அவங்கம்மா ராஜமல்லிகாவை குழந்தையைப் போட்டு அடிச்சிடுவாங்க… உடனே மீனா அழுதுகொண்டே நடிக்க முடியாதுன்னு சொல்லியிட்டு போயிடுவாங்க.

ஷூட்டிங்:

ஷூட்டிங்கில் இப்படி குழந்தையை அடித்துவிடுவதால் என் அப்பா, அந்தம்மாவை கூப்பிட்டு திட்டுவாங்க… எப்பவுமே மீனாவுக்கு ஷூட்டிங் என்றால் தினமும் 10 மில்க் சாக்லேட், 5 ஸ்டார் சாக்லட்டுகளை புரடக்‌ஷனில் சொல்லி என் அப்பா வாங்கி வைத்துவிடுவார்… ஒருநாளைக்கு 10 சாக்லட் தந்துதான் மீனாவிடம் வேலை வாங்க முடியும்… குழந்தை நட்சத்திரம் என்றாலும், அருமையான நடிகை… சொன்னதை கேட்டு நடிப்பாங்க.

நாங்க 2 பேரும் சிறுவயதில் ஒன்றாகச் சுற்றித்திரிந்தவர்கள்… ஒன்றாகவே சாப்பிட்டவர்கள்… அதனால், நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன… நாங்கள் விஷ்ணு படம் எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் மீனாவை மறுபடியும் பார்த்தேன்… அப்போது மீனா பெரிய நடிகையாயிட்டாங்க… விஷ்ணு படத்துக்கு நான்தான் புரடியூசர், விஜய் சார்தான் ஹீரோ… அப்போது மீனா பிரசாத் ஸ்டுடியோவில் அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். நானும் என் அப்பாவும் வெளியில் சேர் போட்டு உட்கார்ந்துட்டிருந்தோம்.

ஞாபகம் இருக்கா?:

என் அப்பாவைப் பார்த்ததுமே, “அங்கிள்” என்று ஓடிவந்து பேசினார் மீனா… அங்கிருந்த என்னைப் பார்த்து, “அண்ணா நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார்… என்னை ஞாபகம் இருக்கா? என்று நான் மீனாவிடம் சிரித்துக் கொண்டே கேட்டேன். அதுக்கப்புறம் என் அப்பா, மீனாவை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.

ஆனால், மீனாவுக்கு 13 வயது காலகட்டங்களில் குழந்தையாகவும் நடிக்க முடியாது, ஹீரோயினாகவும் நடிக்க முடியாது. அப்போது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் இருந்திருக்கிறது. என் அப்பாவிடம் வந்த மீனாவின் அம்மா, குழந்தையாக நடித்தவரை ஒன்றும் தெரியவில்லை.

பலித்த வார்த்தை:

அதற்கு என் அப்பா, “இந்தக் குழந்தை கூடிய சீக்கிரம் பெரிய நடிகையாக வருவாள்… தமிழ் சினிமாவை ஆளாமல் விடாது, நிச்சயம் இது நடக்கும் பார் மல்லிகா என்றார்… அப்பா அன்று சொன்னது பின்னாளில் அப்படியே பலித்தது” என்றார்.… இப்போது வாய்ப்பும் வரவில்லை என்று குறைபட்டு கொண்டார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *