
தில்லித் தேசியத் தலைநகர மண்டலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துக் காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து மேற்கு வங்கத்தின் சிலிக்குரியில் விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் கணக்கில்லாமல் பெருகியுள்ள நிலையில் நடந்து செல்லும் சிறார்களைக் கடித்துக் குதறி வருவது பற்றியும், இவற்றிடம் கடிபடும் பெரியோர்களும் வெறிநாய்க் கடி எனப்படும் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பது பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தில்லித் தேசியத் தலைநகர மண்டலத்தில் வீதியில் சுற்றித் திரியும் நாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்துக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உயிரினங்களுக்கு எதிரானது எனக் கூறி மேற்கு வங்கத்தின் சிலிக்குரியில் விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாய்களைக் காப்போம் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.


