
தென் மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இந்த அலெர்ட் விடப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மொத்தம் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் 16 12 2023 மற்றும் 17 12 2023 : தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



