
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை நோக்கி 220 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மலை ரயில் பெர்ன்ஹில் பகுதியில் வளர்ப்பு எருமை தண்டவாளம் குறுக்கே வந்ததால் இன்ஜின் ஓட்டுனர் பிரேக் அழுத்தியதால் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் இன்று காலை 220 பயணிகளுடன் உதகை நோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது உதகை மலை ரயில் நிலையம் முன்பு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெர்ன்ஹில் பகுதியில் மழைறையில் வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாகத் தண்டவாளம் குறுக்கே தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமை வந்ததால் மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து இறங்கியது. இந்த விபத்தில் வளர்ப்பு எருமை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த 220 பயணிகளும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உதகையில் மலை ரயில் தடம் புரண்டது உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

