Cricket World Cup: ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

Advertisements

ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின்  50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா,  ஏழாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர் கொண்டது.

ஆஸ்திரேலியா – நெதர்லாந்து மோதல்:

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 24வது   போட்டியில் ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்து அணி மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள்  நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சதம் விளாசிய 42.2ஓவரில் வார்னர் அவுட்டான நிலையில்,  ஆஸ்திரேலிய அணி 6விக்கெட்டுகளை இழந்து ஆடியது.

தொடர்ந்து விளையாடிய மேக்வெல் 40பந்துகளில் 100ரன்களை அடித்து உலக சாதனை படைத்தார். கடைசியாக 50 ஓவரில்   ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து399 ரன்களை எடுத்தது.அதனை தொடர்ந்து 400 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய  நெதர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கடைசியாக அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து கடைசியாக நெதர்லாந்து அணி 21 ஓவரில் 90 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம்  அபார ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *