பாஜக கூட்டத்தில் மீண்டும் அண்ணாமலை ஆப்சென்ட்.. என்ன காரணம் தெரியுமா.?

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது வழக்கம் போல இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மேலிடத்து அமைப்புச் செயலாளரான பி.எல் சந்தோஷ் அந்த கூட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசியிருக்கிறார் . வருகிற சட்டமன்றத் தேர்தலை எப்படி கையாள்வது என்பது குறித்து மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் தலைமை விருந்தினராக டெல்லி பாஜக மேல் இடத்து அமைப்புச் செயலாளரான பி எல் சந்தோஷ் கலந்து கொண்டார் .
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , தமிழிசை சௌந்தரராஜன்,  L . முருகன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் . ஆனால் அண்ணாமலை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காலை 11:00 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் மதியம் ஒரு மணி வரை நீடித்தது. இதனிடையே நிர்வாகிகள் மத்தியில் பிஎல் சந்தோஷ் மிக முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.  இது தவிர அரசியல் தொடர்பான சில தகவல்களையும் அவர் வெளியிட்டார் . அவர் பேசும் பொழுது தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பதாக இன்று பத்திரிகைகளில்  பார்த்தேன் .
ஆனால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் என்பதில் பிரதமர் மோடி மிகவும் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் நாம் ஏன் துணை முதல்வராக கூடாது அது மட்டும் அல்ல நம்மில் பலர் அமைச்சராகவும் இருப்பதற்கு தகுதி இருக்கிறது . வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை பொறுத்தவரையில் 20% தொகுதிகளை அதிகமாக பெறுவோம் அதாவது 46 தொகுதிகள் நமக்கு நிச்சயமாக கிடைக்கும் .
உங்களைப் பொறுத்த வரையில் 60 தொகுதிகளில் கவனம் செலுத்துங்கள் . அது மட்டுமல்லாமல் நிச்சயமாக வெற்றி பெறும் தொகுதிகள் எது எது என்பதை திறனாய்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  அந்த தொகுதியை நிச்சயமாக நாம் கேட்டு பெற வேண்டும் என பி ஏல் சந்தோஷ் பேசினார் . அப்பொழுது நிர்வாகிகளில் சிலர் அண்ணாமலைக்கு முக்கிய பதவி தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .
இது குறித்து பேசிய பி எல் சந்தோஷ் தனி நபர் என யாரை பற்றியும் இங்கே நாம் பேச வேண்டாம் விஜய் பற்றியும் இங்கே நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக உள் கட்சி பூசல் வெளியே தெரியாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.  தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் நடைபெறும் உள் கட்சி பூசல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியே பரவுகின்றன .
எனவே தேர்தல் முடியும் வரை அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள் நமக்கு வெற்றி முக்கியம் . இது மட்டுமல்லாமல் கூட்டணி விவகாரத்தில் விரிசில் ஏற்படும் வகையில் பொது வெளிகளில் பேசாதீர்கள்.  அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  பூத் கமிட்டிகளை நாம் வலிமை படுத்த வேண்டும் அந்த வகையில் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருக்கிறது .
யாரும் உங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு பேட்டி தருவதை வேலையாக வைத்துக் கொள்ளாதீர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. சீனியர்கள் தொகுதிகளுக்கு சென்று கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் . இவ்வாறு பேசிய அவர் நான் பேசியதெல்லாம் எனது சொந்த கருத்து அல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் பேசினார் .
பி.எல் சந்தோஷ் பேச்சு பாஜக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த கேசவ விநாயகம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.  இவர் அண்ணாமலைக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 ஆண்டுகளாக அமைப்புச் செயலாளராக பணியாற்றி வந்த கேசவ விநாயகம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அந்த கட்சியினர் மத்தியில் பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *