ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆலிவ் இலை..!

Advertisements

ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் என்பது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆற்றல் அளவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்களுடைய அன்றாட வழக்கத்தில் இதனைச் சேர்ப்பதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் என்பது நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான இயற்கையான வழிகளில் ஒன்றாகத் தற்போது ஒரு சப்ளிமெண்டாக அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது.
ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்டில் காணப்படும் அதிகளவிலான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பொருட்கள் இதனை ஒரு சிறந்த பொருளாக மாற்றுகிறது.

ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் என்பது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆற்றல் அளவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்களுடைய அன்றாட வழக்கத்தில் இதனைச் சேர்ப்பதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக, ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் என்பது உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அல்லது டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நன்மை தருகிறது.

மேலும், ரத்த லிப்பிடுகள் அளவுகளைத் தூண்டவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உதவி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் ஆய்வுகள்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் குறிப்பாக இந்தக் குளிர்காலத்தில் வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருப்பது என்பது மிகவும் முக்கியம்.
இந்த ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களுக்கு எதிராக நம்முடைய உடலை வலுப்படுத்துகிறது.

உடல் எடையைக் குறைப்பதற்கு:

உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த கருவியாக அமைகிறது. இது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், கொழுப்பு மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் இது உதவுகிறது.

மினுமினுப்பான சருமம்:

உங்களுடைய அழகு பராமரிப்பு வழக்கத்தில் ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் சேர்ப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் உங்களுடைய உட்புற ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் வெளி தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தோலில் உள்ள சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் தடுத்து முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கிறது.

மூளை ஆரோக்கியம்:

ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்டில் உள்ள நரம்பு பாதுகாப்பு நன்மைகள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள குறிப்பிடத் தக்க அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அறிவு திறன் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு மன தெளிவு அளித்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

ஆலிவ் இலைகளை நேரடியாகத் தேநீர் அல்லது சாலடுகளில் கலந்து சாப்பிடலாம் என்றாலும் கூட, அதில் உள்ள கசப்பு சுவை அதனை விரும்பத்தகாததாக மாற்றுகிறது.

எனவே மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் இதனைச் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் ஆலிவ் இலை எக்ஸ்ட்ராக்டை பயன்படுத்துவதற்கு முன்பு கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *