நிலத்தடி நீருக்கு வரி : மத்திய அரசு முடிவு! கண்டிக்கும்  விவசாயிகள்..!

Advertisements
நிலத்தடி நீர் வீணாவதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் இதுகுறுத்து கூறுகையில்,  இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு விரைவில் பல்வேறு மாநிலங்களில் 22 முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் போதுமான தண்ணீரைப் பெறுவார்கள். விவசாயிகள் பயன்படுத்தும் நீரின் அளவை பொறுத்து இந்த வரி விதிக்கப்படும்.  இந்த திட்டங்களை இறுதி செய்யும் பணியில் தற்போது  ஈடுபட்டு உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளும்  கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில், “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார். உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது  என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதநிலை.  உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது.
அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக  பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது – உடனடியாக அறிவிப்பை திரும்ப பெற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து 22 திட்டங்களை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதுபோல விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்று நீர், நிலத்தடி நீர் ஆகிய இரண்டிற்கும் வரி விதிக்கும் முயற்சியில் நீண்ட காலமாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள காரணத்தால் இந்த முயற்சி ஒவ்வொரு முறையும் முறியடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *