Amit shah:காங்கிரஸ் எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது!

Advertisements

அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.

இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காகக் காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.

1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.

அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *