
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் சங்கீத் நிகழ்ச்சி மயில் தோகை போன்ற ஆடையை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் சங்கீத் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனக் களைகட்டியது.

ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் தனது ஆடைமூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி ஜான்வியின் காதலன் என்று கூறப்படும் ஷிகர் பஹாரியாவுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.
ஜான்வி ஒரு அழகான லெஹெங்காவை அணிந்திருந்தார். அது தேவதை போன்ற தோற்றத்தை ஜான்விக்கு கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கீழே முழுக்க முழுக்க மயில் இறகுகள் டிசைனில் உருவாக்கப்பட்டிருந்தது.

அவரது உடையில் மார்பளவு நீலம் மற்றும் பச்சை நிற சீக்வின்கள் இடம்பெற்றது. ஜான்வி கபூரின் இந்த ஆடை மயில் நிற லெஹங்காவாக ஆரம்பித்தது, முழுக்க முழுக்க மயில் தோகை வடிவத்தில் ஜான்வியின் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.




