இனி இந்திய ஆண் – பெண்கள் இடையே திருமணம் நடக்காது – டிரம்ப் !

Advertisements

நியூயார்க்:

அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்களிடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதி காரணமாக இந்த வழக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள்.

உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் – தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்தக் குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும்.

அமெரிக்காவில் இந்தச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்:

டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தைக் கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறை படுத்தி உள்ளார்.

1. இனி அங்கே பிறக்கும் குழந்தை ஒன்றிற்கு தானாகக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் அதன் பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

2. இந்தப் புதிய விதிப்படி… அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும்.

3. இனி அங்கே சிட்டிசன்ஷிப் பெறுவதற்கு குடியுரிமை அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.

4. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான் முடிவை எடுக்க உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

திருமணங்கள் குறையும்:

இந்தப் புதிய விதி காரணமாக அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்களிடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அங்கே எல்லா இந்தியர்களிடமும் கிரீன் கார்டு இல்லை.

பலரும் எச் 1 பி விசா வைத்துள்ளனர். இப்போது ஆண் பெண்களில் ஒருவராவது கிரீன் கார்டு வைத்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிறக்கும் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்கும். இதன் காரணமாகக் கிரீன் கார்டு உள்ள இந்திய ஆண் அல்லது பெண்ணுக்குத் திருமணம் நடக்கும்.

கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களைத் திருமணம் செய்ய மட்டுமே பெரும்பாலும் ஆணோ, பெண்ணோ முன் வருவார்கள். இது ரிஸ்க்கான விஷயம்… அதோடு கிரீன் கார்டு உள்ள பல இந்தியர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தியர்கள் அமெரிக்கர்களைத் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

அல்லது அமெரிக்காவில் குடியுரிமை உள்ள பிற நாட்டினரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்களிடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *