Advertisements

ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் 4-வது உலக தெலுங்கு மாநாடு நடைபெற்றது. இதில் ,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், மக்கள் ஒருவருக்கொருவர் அவரவர்களுடைய மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை என்றார்.தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது என்று கூறினார். குழந்தைகளுக்கு தாய் மொழியின் மீது அன்பு கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Advertisements


