ரூ.1,595 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்..!

திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் கைவினைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், 1595 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியரக வளாகத்தில் கலைஞர் கைவினைத்திட்டம் மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். முதற்கட்டமாக 61 புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பிறகு  அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், உழவர்களுக்கு வேளாண் கருவிகள், தாட்கோ மூலம் நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றை வழங்கினார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு ஆயிரத்து  595  கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும்  நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர்  பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வருவாய்த்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *