Niveditha Pankaj:வில்லி நடிகை கூறிய குட் நியூஸ்!அப்பாவாகப் போகும் சன் டிவி ஹீரோ!

Advertisements

கடந்த பிப்ரவரி மாதம் திருமகள் சீரியல் ஹீரோ மற்றும் நடிகை நிவேதிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

‘வாணி ராணி’ சீரியல் மூலம் அறிமுகமான நிவேதிதா பங்கஜ், பின்னர் கல்யாண பரிசு, திருமகள், சுந்தரி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, ‘மகராசி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த, எஸ் எஸ் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆரியனை விட்டுப் பிரிந்த பின்னர், மீண்டும் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார் நிவேதிதா பங்கஜ். ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முடிவடைந்த ‘திருமகள்’ சீரியலில் இவர் வில்லியாக நடித்து வந்தபோது, அந்தச் சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தருக்கும் – நிவேதிதாவுக்கும் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது.

ஆரியனிடமிருந்து விவாகரத்து பெற்ற நிவேதிதா, சுரேந்தருடன் டேட்டிங் செய்து வந்த நிலையில்… இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெற்றோர் சம்பந்தத்துடன் குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும் தங்களுடைய திருமணத்திற்கு முன்பே, இருவரும் காதலித்து வரும் தகவலை ரொமான்டிக் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு அறிவித்தனர்.

இந்நிலையில் திருமணம் ஆன 8 மாதத்திற்கு பின்னர் நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு, இந்தச் சின்னத்திரை சீரியல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். தற்போது சுரேந்திரன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *